வைரலாகும் சமந்தா எழுதிய கவிதை


வைரலாகும்  சமந்தா எழுதிய கவிதை
x
தினத்தந்தி 29 Sept 2025 8:48 PM IST (Updated: 29 Sept 2025 9:25 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணின் வாழ்க்கையில் 20 வயதிலிருந்து 30 வயது என்பது எந்தவகையில் மாறுபட்டதாக உள்ளது என்பதை கவிதையாக சமந்தா எழுதியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த 'விண்ணைதாண்டி வருவாயா' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து 'பானா காத்தாடி, நீதானே பொன் வசந்தம், அஞ்சான்' என பல படங்களில் நடித்து பிரபலமானார்.அதனை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார் சமந்தா. 2014-ம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து, விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.

கடைசியாக தமிழ் சினிமாவில் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்த போதிலும் சாகுந்தலம் மற்றும் குஷி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தார். அப்பாவின் மறைவு, மயோசிடிஸ் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். மீண்டும் முன்புபோல படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இதற்கு மத்தியில் நடிப்பு, தனிப்பட்ட வாழ்வு தொடர்பாகச் சமூகவலைதளங்களில் சமந்தா இடுகிற பதிவுகள் தொடர்ந்து அனைவரது கவனிப்பையும் இருந்து வருகின்றன. அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார் சமந்தா. தான் அழகாகத் தோற்றமளிக்கிற ஒரு வீடியோ உடன் அதனைப் பதிவிட்டிருக்கிறார். தனது ஒப்பனைக் கலைஞர் அவ்னி ராம்பியா உடன் உரையாடியபிறகு அதனை எழுதியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

முப்பதுகளை அடையும்போது வாழ்வில் அதுவரை இருந்த பொலிவு அனைத்தும் மங்கிவிடும் என உலகம் சொல்லும் என்றும், அப்போது இருபதுகளில் இருந்தது போன்று வாழ்வதற்கான முயற்சிகளைச் செய்வோம் என்றும், ஏற்கனவே நாம் பூரணமாக இருப்பதை அந்த காலகட்டத்தில் சொல்ல மாட்டார்கள் என்றும் அந்த கவிதையில் குறிப்பிட்டிருக்கிறார் சமந்தா.

முப்பதுகளைத் தாண்டியபிறகு உலகத்திற்காக ஒரு முகம், தனிப்பட்ட வாழ்வில் ஒரு முகம் என்ற வேறுபாட்டினைக் களைந்து எங்கும் ஒரே முகத்தோடு இருப்பதே முழுமையான பூரணத்துவம் எனச் சொல்லியிருக்கிறார். அந்த முழுமை ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும் எனத் தான் விரும்புவதாகச் சொல்லியிருக்கும் சமந்தா, ‘நீங்கள் நீங்களாக இருக்கும்போது உங்களை மட்டும் சுதந்திரப்படுத்திக் கொள்ளாமல் ஒட்டுமொத்த உலகையும் சுதந்திரமானதாக ஆக்குகிறீர்கள்’ என்று கவிதையில் சொல்லியிருக்கிறார்.

1 More update

Next Story