சிறப்பு தோற்றத்தில் சமந்தா - வைரலாகும் 'சுபம்' டிரெய்லர்


Samantha makes a special appearance - Shubham trailer goes viral
x

’சுபம்’ படத்தின் மூலம் சமந்தா தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான சிட்டாடல் தொடரில் நடித்திருந்தார். தற்போது மேலும் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார்.

இதுவரை நடிகையாக மட்டுமே வலம் வந்த சமந்தா தற்போது தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். அதன்படி, சமந்தா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸின் கீழ் "சுபம்" என்ற படத்தை தயாரித்திருக்கிறார். பிரவீன் காந்த்ரேகுலா இயக்கும் இப்படத்தில் பல புது முகங்கள் நடித்திருக்கின்றனர்.

இப்படம் வருகிற 9-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதில் சமந்தா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

1 More update

Next Story