9 வருடங்களுக்கு பிறகு அட்லீ படத்தில் சமந்தா?


Samantha in Atlees film after 9 years?
x

அட்லீ இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ’தெறி’ படத்தில் சமந்தா நடித்திருந்தார்.

சென்னை,

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைய இருக்கிறார். அட்லீ, ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்க உள்ள இப்படத்தின் மீது அனைவரின் பார்வையும் உள்ளது.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில், சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் அட்லீயை சந்தித்து இப்படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அல்லு அர்ஜுன் சென்னை வந்ததாக கூறப்பட்டது.

இதற்கிடையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்திற்கன அறிவிப்பை இன்று வெளியிட உள்ளது. இது அட்லீ-அல்லு அர்ஜுன் படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இப்படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தநிலையில், தற்போது சமந்தா இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அட்லீ இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'தெறி' படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில், 9 வருடங்களுக்கு பிறகு அட்லீ படத்தில் சமந்தா நடிப்பார்.

1 More update

Next Story