ஹாலிவுட் படத்தில் ஆட்டோ டிரைவராக நடிக்கும் சல்மான் கான்? - கசிந்த வீடியோ


Salman Khan To Play An Indian Auto-Driver In His Hollywood Debut?
x

சல்மான் கான் தற்போது ஹாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மும்பை,

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'சிக்கந்தர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் இவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சல்மான் கான் ஹாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, சவுதி அரேபியாவில் ஒரு ஹாலிவுட் படத்தில் சல்மான் கானும் , சஞ்சய் தத்தும் நடித்து வரும் படியான வீடியோ ஒன்று கசிந்து இருக்கிறது.

இதில், சல்மான் கான் ஆட்டோ டிரைவர் தோற்றத்தில் காணப்படுகிறார். இதனையடைத்து, இந்திய ஆட்டோ டிரைவராக ஹாலிவுட்டில் சல்மான் கான அறிமுகமாக உள்ளதாக ரசிகர்கள் தகவல் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பான எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


1 More update

Next Story