'எல் 2 எம்புரான்' உடன் 'சிக்கந்தர்' மோதுவது பற்றி சல்மான் கான் கருத்து


Salman Khan breaks silence on box office clash of Sikandar with L2 Empuraan, says Mohanlal-starrer will be ‘excellent’
x

ரம்ஜான் பண்டிகையையொட்டி 2 பெரிய படங்கள் வெளியாகின்றன.

மும்பை,

இந்த ரம்ஜான் பண்டிகையையொட்டி 2 பெரிய படங்கள் வெளியாகின்றன. அதில், பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள எல்2: எம்புரான் படம் நேற்று வெளியானது. அடுத்தது, சல்மான் கானின் 'சிக்கந்தர்' படம் வருகிற 30-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், 'எல் 2 எம்புரான்' உடன் 'சிக்கந்தர்' பாக்ஸ் ஆபிஸில் மோதுவது குறித்து சல்மான் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், "ஒரு நடிகராக மோகன்லால் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். பிருத்விராஜ் இயக்கிய இது ஒரு சிறந்த படமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும்" என்றார்.

மேலும், அடுத்த மாதம் 10-ம் தேதி வெளியாகும் சன்னி தியோலின் ஜாத் படத்திற்கும் தனது வாழ்த்துகளை சல்மான் கான் தெரிவித்தார்.

1 More update

Next Story