ஸ்ரீலீலா படத்தின் பாடலை வெளியிட்ட மகேஷ் பாபு


Robinhood second single WhereverYouGo Out Now
x

ஸ்ரீலீலா, தற்போது கதாநாயகியாக நடித்துள்ள படம் ராபின்ஹுட்.

சென்னை,

மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தில் இடம்பெற்ற குர்ச்சி மடத்த பெட்டி பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமான ஸ்ரீலீலா, தற்போது கதாநாயகியாக நடித்துள்ள படம் ராபின்ஹுட். நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்குகிறார்.

ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் மார்ச் 28-ம் தேதி வெளியாக உள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடலான 'ஒன் மோர் டைம்' ஏற்கனவே வெளியாகி இருந்தநிலையில், இப்படத்தின் 2-வது பாடல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, 'வாட்டெவர் யூ கோ' என்ற இந்த பாடலை மகேஷ் பாபு வெளியிட்டுள்ளார்.

1 More update

Next Story