'காந்தாரா சாப்டர் 1' ரிலீஸ் தேதி அறிவிப்பு


காந்தாரா சாப்டர்  1 ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Nov 2024 12:02 PM (Updated: 17 Nov 2024 12:18 PM)
t-max-icont-min-icon

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கும் 'காந்தாரா சாப்டர் 1' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து, இயக்கிய படம்'காந்தாரா'. கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர். ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பை பெற்றது. ரூ.16 கோடி செலவில் தயாராகிரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. காந்தாரா திரைப்படத்தில் ரிஷப் 3 விதமான தோற்றங்களில் நடித்திருந்தார். இதில் அவர் ஏற்று நடித்த பஞ்சுருளி தெய்வ கதாபாத்திரம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதன் 2-ம் பாகம் உருவாகும் என்று படக்குழு கூறியிருந்தது. ஆனால்,அது காந்தாரா படத்தின் முதல் பாகம் என்று அறிவித்த படக்குழு, அதற்கு காந்தாரா: சாப்டர் 1 என்று டைட்டில் வைத்துள்ளது. இந்தப் படத்துக்கான பூஜை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. இந்நிலையில் இதில் நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.

இந்தப் படம் கி.பி.மூன்றாம் நூற்றாண்டில், கடம்ப வம்ச ஆட்சியின் பின்னணியில் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பூதகோலா ஆட்டத்தின் ஒரு பகுதியாக வணங்கப்படும் பஞ்சுர்லி தெய்வத்தின் பூர்வீகத்தை இந்தப் படம் பேசும் என்கிறார்கள்.

காந்தாரா படத்தை இயக்கி, நடித்த ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். ஹனுமன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையே, காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியானதுடன் வேறெந்த புதிய அப்டேட்களும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், காந்தாரா படத்தின் முன்கதையாக உருவாகி வரும் 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் அடுத்தாண்டு அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


Next Story