கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் முதல் மலையாள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


Release date announced for Gautham Vasudev Menons Dominic and the Ladies Purse
x

புத்தாண்டை முன்னிட்டு, 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

சென்னை,

கேரள திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி . இதுவரை ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவரது நடிப்பில் அண்மையில் வெளியான டர்போ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தையடுத்து, மம்முட்டி 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். இது இவர் இயக்கும் முதல் மலையாளப் படமாகும்.

இப்படத்தை தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மம்முட்டியே தயாரிக்கிறார். லீனா, சித்திக், விஜய் பாபு மற்றும் விஜி வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு, 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 23-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story