ரவி தேஜாவின் பிறந்தநாளில் வரும் 'மாஸ் ஜாதரா' படத்தின் முக்கிய அப்டேட்?


Ravi Teja Mass Jathara Movie Teaser Expected As Birthday Special
x

நடிகர் ரவி தேஜா தனது 75-வது படமான 'மாஸ் ஜாதரா'வில் நடித்து வருகிறார்

சென்னை,

மிஸ்டர் பச்சன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரவி தேஜா தனது 75-வது படமான 'மாஸ் ஜாதரா'வில் நடித்துவருகிறார். இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க அறிமுக இயக்குனர் பானு போகவரபு இயக்குகிறார்.

இவர் இதற்கு முன் 'வால்டர் வீரய்யா' திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் ஆவார். இதில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். 'தமாகா' படத்துக்குப் பிறகு மீண்டும் ரவி தேஜா - ஸ்ரீலீலா இணைந்து இப்படத்தில் நடிக்கின்றனர். 'தமாகா' படத்துக்கு இசையமைத்த பீம்ஸ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இப்படம் வரும் மே 9-ம் தேதி திரைக்கு வரும்நிலையில், படத்தின் டீசர் குறித்த முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி, வரும், 26-ம் தேதி ரவி தேஜா தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அன்று மாஸ் ஜாதரா படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story