வேலை நேரம் குறித்து ராஷ்மிகாவின் சுவாரசிய கருத்துகள்


Rashmikas interesting comments on working hours
x
தினத்தந்தி 29 Oct 2025 10:45 AM IST (Updated: 29 Oct 2025 10:45 AM IST)
t-max-icont-min-icon

தனக்கும் வேலை நேரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

சென்னை,

நடிகர், நடிகைகளின் வேலை நேரம் சில காலமாகவே சினிமா துறையில் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. சமீபத்தில், ராஷ்மிகா மந்தனா இதற்கு பதிலளித்துள்ளார். தனக்கும் வேலை நேரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் புரமோஷனின்போது ஒரு நேர்காணலில் ராஷ்மிகா இதனை கூறினார். அவர் கூறுகையில், நடிகர்கள் மட்டுமல்ல, இயக்குநர்கள் முதல் லைட் மேன் வரை அனைவருக்கும் வேலை நேரத்தை நிர்ணயித்தால் நல்லது. அது அவர்களுக்கு தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிட உதவும்.

இனிமேல் நானும் என் குடும்பத்திற்கு நேரம் செலவிட விரும்புகிறேன். ஒரு தாயான பிறகு அது எப்படி இருக்கும் என்பதை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை " என்றார். ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படம் நவம்பர் 7-ம் தேதி வெளியாக உள்ளது.

1 More update

Next Story