9 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யப்படும் ரஜினிமுருகன்


Rajini Murugan to be re-released after 9 years
x

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2016- ம் ஆண்டு வெளியான படம் ரஜினிமுருகன்

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான 'வருத்தபடாத வாலிபர் சங்கம்' திரைப்படம் அவருடைய கெரியரில் திருப்புமுனையாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து, அப்படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2016- ம் ஆண்டு உருவாகிய ரஜினிமுருகன் திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது.

இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக உருவான சீமராஜா திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி முருகன் திரைப்படம் மார்ச் மாதம் ரீ ரிலீஸ் ஆகவுள்ளதாக படத்தைத் தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


Next Story