ராகவா லாரன்ஸின் 'புல்லட்' படப்பிடிப்பு நிறைவு


ராகவா லாரன்ஸின் புல்லட் படப்பிடிப்பு நிறைவு
x

ராகவா லாரன்ஸின் ‘புல்லட்’ படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா சீரிஸ் படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதனிடையே திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ராகவா லாரன்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

நடிகர் ராகவாலாரன்ஸ் தனது 47-வது பிறந்தநாளையொட்டி, 'புல்லட்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இப்படத்தை இன்னசி பாண்டியன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் அருள்நிதி நடிப்பில் வெளியான டைரி திரைப்படத்தை இயக்கியவராவார். இந்த படத்தை பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸின் தம்பியான எல்வின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வைஷாலி ராஜ் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது .இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

மேலும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் 'பென்ஸ்' படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இது லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 2 -வது படமாகும். அதனையடுத்து வெங்கட் மோகன் இயக்கத்தில் 'ஹண்டர்', அறிமுக இயக்குனரான துரை செந்தில் குமார் இயக்கத்தில் 'அதிகாரம்' போன்ற படங்களில் நடிக்க இருக்கிறார். மேலும், 'காஞ்சனா 4' பட பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.


Next Story