இந்தி பாக்ஸ் ஆபீஸில் முதல் இடத்தை பிடித்த புஷ்பா 2


Pushpa 2 tops the Hindi box office
x

இந்தி பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

சென்னை,

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து, பிரம்மாண்ட பொருட்செலவில் 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகியுள்ளது. கடந்த மாதம் 5-ந் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். மேலும் சாம் சி எஸ் இப்படத்திற்கு பின்னணி இசை அமைத்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது.

இப்படம் வெளியாகி 31 நாட்கள் ஆனநிலையில், இந்தி பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. அதன்படி, இப்படம் இந்தியில் மட்டும் ரூ. 806 கோடி வசூலித்து இந்தி பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.1799 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.


Next Story