'ஓஜி' பட அப்டேட் கொடுத்த பிரியங்கா மோகன்

பவன் கல்யாணுக்கு ஜோடியாக ’ஓஜி’ படத்தில் பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.
சென்னை,
நடிகர் நானி நடிப்பில் வெளிவந்த 'கேங் லீடர்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன், தற்போது தமிழ் சினிமாவில் தொடந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதன்படி, இவரை தமிழ் திரையுலகின் பக்கம் கொண்டு வந்தவர் இயக்குனர் நெல்சன்.
2021ம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, நெல்சன் இயக்கிய 'டாக்டர்' படத்தில் ஹீரோயினாக நடித்தார் பிரியங்கா. டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, 'டான்' படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே அடுத்தடுத்து வெற்றிபெற்றது.
அதன்பிறகு தனுஷுக்கு ஜோடியாக 'கேப்டன் மில்லர்' படத்திலும், ஜெயம் ரவிக்கு ஜோடியாக சமீபத்தில் வெளியான 'பிரதர்'படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக 'ஓஜி' படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும்நிலையில், நடிகை பிரியங்கா மோகன் இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதம் உள்ளது என்று அப்டேட் கொடுத்துள்ளார். மேலும், பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது தனது கனவாக இருந்தது என்றும் அது தற்போது நிறைவேறி உள்ளது என்றும் கூறினார்.