ஜப்பானிலும் வசூலை குவிக்க தயாரான 'ஹனுமான்'


Prasanth Varmas HanuMan to release in Japan on October 4
x
தினத்தந்தி 30 July 2024 6:07 AM GMT (Updated: 30 July 2024 7:00 AM GMT)

'ஹனுமான்' திரைப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்தது.

சென்னை,

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாரான படம் 'ஹனுமான்'. தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்தார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்த இந்த திரைப்படத்திற்கு கவுரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்தனர். இந்த படத்தை பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்தார்.

இந்த படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்நிலையில், ஹனுமான் படம் ஜப்பான் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக இப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா தெரிவித்துள்ளார்.

அதன்படி, அக்டோபர் மாதம் 4-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. 'ஹனுமான்' திரைப்படம் ஜப்பானிலும் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story