ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கன்னட நடிகை

பிரபல கன்னட நடிகையான ருக்மணி வசந்த் தெலுங்கில் நடிகர் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடிக்க உள்ளார்.
சென்னை,
கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ருக்மணி வசந்த். நடிகை ருக்மணி வசந்த் கன்னடத்தில் உருவான சப்த சாகரதாச்சே எல்லோ படத்தின் மூலம் பிரபலமடைந்தவர். இவர் தற்போது பஹீரா படத்தை தொடர்ந்து, சிவராஜ்குமாருடன் 'பைரதி ரணகல்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் 2017-ம் ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டான 'முப்தி' படத்தின் தொடர்ச்சியாகும். இதில், சிவராஜ்குமார் வழக்கறிஞராகவும், ருக்மணி வசந்த் மருத்துவராகவும் நடித்துள்ளனர்.
இவர் தற்போது தமிழில் விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்' படத்திலும், சிவகார்த்திகேயன் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது நடிகை ருக்மணி வசந்த் தெலுங்கில் நடிகர் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து ஒரு பிரமாண்டமான படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் ஜூனியர் என்டிஆர் மற்றும் பிரசாந்த் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.