விஜய்யின் கடைசி பட அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே


Pooja Hegde shares exciting update on Thalapathy Vijay’s Jana Nayagan
x

''ஜன நாயகன்'' படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

தளபதி விஜய்யின் அடுத்த மற்றும் கடைசி படமாக ''ஜன நாயகன்'' உருவாகியுள்ளது. இதனால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக உள்ளன.

எச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் அப்டேட்டை பூஜா ஹெக்டே பகிர்ந்துள்ளார்.

அதன்படி, படப்பிடிப்பை முடித்துவிட்டதாக மகிழ்ச்சியான செல்பியுடன் இன்ஸ்டாகிராமில் அவர் தெரிவித்திருக்கிறார். டப்பிங் பணிகள் மட்டுமே மீதமுள்ளன.

இப்படத்தில், பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கே.வி.என். புரொடக்சன்ஸ் தயாரிக்கும் முதல் தமிழ் படமான இதற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது.

1 More update

Next Story