'தேவா' - படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்த பூஜா ஹெக்டே


Pooja Hegde shares BTS moments from Deva
x

கடந்த ஆண்டே வெளியாக இருந்த தேவா படம் கடந்த 31-ம் தேதி வெளியானது.

சென்னை,

தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வரும் பூஜா ஹெக்டே, தமிழில் 'முகமூடி' படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து பிரபலமானார். சூர்யாவுக்கு ஜோடியாக 'ரெட்ரோ' படத்திலும், ஷாஹித் கபூருடன் தேவா படத்திலும் நடித்து முடித்துள்ள இவர், தற்போது விஜய்க்கு ஜோடியாக தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.

இதில், கடந்த ஆண்டே வெளியாக இருந்த தேவா படம் கடந்த 31-ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் தேவா, இந்த ஆண்டு வெளியான முதல் பூஜா ஹெக்டே படமாகும்.

இந்நிலையில், தியாவாக நடித்த தேவா படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை பூஜா ஹெக்டே பகிர்ந்துள்ளார். அதனுடன், தியா மீது அன்பையும் பாராட்டையும் செலுத்தும் அனைவருக்கும் நன்றி. தியா இப்போது உங்களுடையவள்' என்று பதிவிட்டுள்ளார்.


Next Story