'எனது சினிமா வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் மாதிரி' - பூஜா ஹெக்டே

தற்போது விஜய்க்கு ஜோடியாக ’ஜனநாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
சென்னை,
தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வரும் பூஜா ஹெக்டே, தமிழில் 'முகமூடி' படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து பிரபலமானார். சூர்யாவுக்கு ஜோடியாக 'ரெட்ரோ' படத்திலும், ஷாஹித் கபூருடன் தேவா படத்திலும் நடித்து முடித்துள்ள இவர், தற்போது விஜய்க்கு ஜோடியாக 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார்.
இதில், தேவா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், சினிமா வாழ்க்கை தனக்கு ரோலர் கோஸ்டரில் பயணம் செய்வதுபோல இருந்ததாக நடிகை பூஜா ஹெக்டே கூறி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,
'12 வருட சினிமா பயணம் எனக்கு ரோலர் கோஸ்டரில் சவாரி செய்ததுபோல இருந்தது. அதில் வரும் ஏற்றம், இறக்கம், சரிவு போல பல வெற்றிகளையும் தோல்விகளையும், அதேபோல் உயர்வையும் தாழ்வையும் பார்த்திருக்கிறேன் ' என்றார்.
Related Tags :
Next Story