விஜய்யின் கடைசி படத்தில் அவருடன் பணியாற்றுவது பற்றி மனம் திறந்த பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே தற்போது விஜய்க்கு ஜோடியாக 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை,
தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வரும் பூஜா ஹெக்டே, தமிழில் 'முகமூடி' படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து பிரபலமானார். சூர்யாவுக்கு ஜோடியாக 'ரெட்ரோ' படத்திலும், ஷாஹித் கபூருடன் தேவா படத்திலும் நடித்து முடித்துள்ள இவர், தற்போது விஜய்க்கு ஜோடியாக 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் கடைசி படமாகும்.
அதன்பிறகு அவர் சினிமாவை விட்டு விலகி அரசியல் பணி செய்ய உள்ளார். இந்த நிலையில் விஜய்யின் கடைசி படத்தில் அவருடன் பணியாற்றுவது பற்றி நடிகை பூஜா ஹெக்டே பேசி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,
'அவரை திரையில் பார்க்க விரும்பும் ஒரு ரசிகையாக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இருந்தாலும், அவரது புதிய பயணத்தை ஆதரிக்கிறேன்' என்றார்.
Related Tags :
Next Story