பாலிவுட் நட்சத்திரங்கள் குறித்த பவன் கல்யாணின் பேச்சு வைரல்


Pawan Kalyan’s speech on Bollywood stars goes viral
x

நடிகரும் ஆந்திர துணை முதல் மந்திரியுமான பவன் கல்யாண் ஆற்றிய உரை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

விஜயவாடா,

கடந்த வெள்ளிக்கிழமை மாலை விஜயவாடாவில் நடிகரும் ஆந்திர துணை முதல் மந்திரியுமான பவன் கல்யாண் ஆற்றிய உரை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின்போது அமைதியாக இருந்த பாலிவுட் நட்சத்திரங்களை நடிகர் பவன் கல்யாண் கடுமையாக சாடினார்.

அவர் கூறுகையில், 'பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின்போது பாலிவுட் நட்சத்திரங்கள் அமைதியாக இருந்தார்கள். அவர்களிடம் தேச பக்தியை எதிர்பார்க்காதீர்கள். இந்த நாடு நடிகர்களாலும் பிரபலங்களாலும் ஆளப்படுவதில்லை. நடிகர்கள் வெறும் பொழுதுபோக்கு கலைஞர்கள். நமது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த முரளி நாயக் போன்ற வீரர்கள்தான் உண்மையான தேசபக்தர்கள். அத்தகைய ஹீரோக்களிடமிருந்து உத்வேகம் பெற வேண்டும், "என்றார்.

1 More update

Next Story