அடுத்த மாதம் துவங்கும் பிரசாந்த் நீல் - ஜூனியர் என்.டி.ஆர் படத்தின் படப்பிடிப்பு?


NTRNeel: The regular shooting to begin next week!?
x

ஜூனியர் என்.டி.ஆர் அடுத்ததாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் கடைசியாக தேவரா படத்தில் நடித்திருந்தார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்தது.

இப்படத்தை தொடர்ந்து, பாலிவுட்டில் வார் 2 படத்தில் நடித்து வரும் ஜூனியர் என்.டி.ஆர், பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story