சாய் பல்லவி இல்லை..நிதினின் 'எல்லம்மா' படத்தில் கதாநாயகி இவரா?

நகைச்சுவை நடிகராக இருந்து இயக்குனராக மாறியவர் வேணு யெல்டாண்டி
சென்னை,
கடந்த 2023-ம் ஆண்டு வெளியான 'பாலகம்' படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, நகைச்சுவை நடிகராக இருந்து இயக்குனராக மாறிய வேணு யெல்டாண்டி தனது இரண்டாவது படமாக எல்லம்மாவை இயக்க உள்ளார்.
இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகை குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாதநிலையில், அவர்கள் பற்றி வெளிவரும் தகவல் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி, ஆரம்பத்தில், நானி கதாநாயகனாக நடிப்பதாக கூறப்பட்டநிலையில், தற்போது நிதின் கதாநாயகனாக நடிப்பதாக மற்றொரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அதே நிச்சயமற்ற தன்மைதான் கதாநாயகி மீதும் சூழ்ந்திருக்கிறது. அதன்படி, இப்படத்தில் சாய் பல்லவி நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அவரை இப்படத்தில் காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.
இருப்பினும், தற்போது கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் வேணு யெல்டாண்டி அவரிடம் ஸ்கிரிப்டை விவரித்ததாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.