'வெறும் மணிரத்னம் இல்லை, 'அஞ்சரை' மணிரத்னம்' - கமல்ஹாசன்

’தக்லைப்’ படக்குழு சென்னையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளது.
சென்னை,
36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
இப்ப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இன்று இப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' வெளியாக உள்ளது. இந்நிலையில், 'தக்லைப்' படக்குழு சென்னையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளது.
இதில், கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் பேசிய கமல்ஹாசன், "என் மீது பாசம் வைப்பதில் தந்தை டி.ராஜேந்தரை மிஞ்சிவிட்டார் சிம்பு. டி.ஆர்-க்கு என்மீது அதிகப்படியான பாசம் உள்ளது. எனக்கு ஏதாவது பிரச்சினை என்றால் என் நெஞ்சில் சாய்ந்து அழுது சட்டையை நனைத்துவிடுவார்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 'படப்பிடிப்புக்கு 5.30 மணிக்கே மணிரத்னம் வந்துவிடுவார். அவர் வெறும் மணிரத்னம் இல்லை, அஞ்சரை மணிரத்னம். அவருடனான நட்பு எந்த தருணத்திலும் மாறவில்லை' என்றார்.






