ஹேமா கமிட்டி அறிக்கை...முடித்து வைக்கப்பட்ட வழக்குகள் - அதிருப்தியில் நடிகை பார்வதி


‘No rush—it’s just been 5½ years since Hema report was submitted,’ Parvathy mocks Kerala Govt
x
தினத்தந்தி 3 Jun 2025 4:06 PM IST (Updated: 3 Jun 2025 4:11 PM IST)
t-max-icont-min-icon

குழுவின் முன் வாக்குமூலம் அளித்தவர்கள் வழக்கைத் தொடர ஆர்வம் காட்டாததால், 35 வழக்குகளில் 21 வழக்குகளை முடித்து, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மலையாள திரையுலகை உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் சில வழக்குகள் முடிக்கப்பட்டன. ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், குழுவின் முன் வாக்குமூலம் அளித்தவர்கள் வழக்கைத் தொடர ஆர்வம் காட்டாததால், சிறப்புக் குழுவானது பெண் திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்த 35 வழக்குகளில் 21 வழக்குகளை முடித்து, அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இதேபோல், இதில் மீதமுள்ள 14 வழக்குகளிலும் அறிக்கை அளித்தவர்கள் அதே நிலைப்பாட்டை மீண்டும் கூறியிருப்பதால், அவற்றையும் இந்த மாதம் முடிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள வழக்குகளை முடித்து வைக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதற்கு, நடிகை பார்வதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை டேக் செய்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

1 More update

Next Story