'நிறங்கள் மூன்று' திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ அப்டேட்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் வரும் 22ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நிறங்கள் மூன்று'. இந்த படத்தில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகி உள்ளது.
இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் கடந்த ஆண்டு வெளியானது. சில பிரச்சினைகள் காரணமாக 'நிறங்கள் மூன்று' திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருக்கிறது. ஏற்கனவே கார்த்திக் நரேன் இயக்கிய 'நரகாசூரன்' படம் வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படம் வரும் நவம்பர் 22ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தில் அதர்வா வெற்றி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் வெற்றி கதாப்பாத்திரத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை நாளை மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.