''ஹரி ஹர வீரமல்லு'' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு...ரசிகர்கள் மகிழ்ச்சி

''ஹரி ஹர வீரமல்லு'' படத்தின் ரிலீஸ் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டதால் ரசிகர்கள் விரக்தியில் இருந்தனர்.
சென்னை,
பவன் கல்யாணின் ''ஹரி ஹர வீரமல்லு'' படத்தின் ரிலீஸ் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டதால் ரசிகர்கள் விரக்தியில் இருந்தனர்.
இந்நிலையில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த மாதம் 24-ம் தேதி வெளியாக இருக்கிறது.
மீண்டும் மீண்டும் தாமதங்கள் ஏற்பட்டதால் விரக்தியில் இருக்கும் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த விரைவில் டிரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் பாபி தியோல் முக்கிய வில்லனாக நடித்திருக்கிறார். மேலும், நாசர், சத்யராஜ், சுனில், தலிப் தஹில், சச்சின் கெடேகர், சுப்பராஜு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Related Tags :
Next Story






