நானி நடிக்கும் 'தி பாரடைஸ்' படத்தின் புதிய போஸ்டர்


New poster of Nanis The Paradise
x

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சென்னை,

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். இவரது நடிப்பில் வெளிவந்த 'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா', 'தசரா' , 'ஹாய் நான்னா', 'சூர்யாவின் சனிக்கிழமை' ஆகிய திரைப்படங்கள் அமோக வெற்றியைப் பெற்றன.

தற்போது இயக்குனர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் 'ஹிட் 3' படத்தில் நானி நடித்து வருகிறார். சமீபத்தில் நானியின் 33-வது படத்தின் அறிவிப்பு வெளியானது. தசரா படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா நானியின் 33-வது படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்குத் 'தி பாரடைஸ்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் கிளிம்ப்ஸ் நாளை வெளியாக உள்ளநிலையில், புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் காக்கையின் முகம் உள்ளது.


Next Story