'கண்ணப்பா' படத்தின் புதிய போஸ்டர் - வைரலாகும் மோகன்லாலின் தோற்றம்
இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் என்ற வேடத்தில் நடித்துள்ளார்.
சென்னை,
தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் கண்ணப்பா. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் என்ற வேடத்தில் நடித்துள்ளார்.
மேலும், இப்படத்தில் மோகன்பாபு, சரத்குமார், ஐஸ்வர்யா, காஜல் அகர்வால், அக்சய் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், நடிகர் மோகன்லாலின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தில் மோகன்லால், கிராதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில், அக்சய் குமார், மோகன் பாபு, நடிகை ஐஸ்வர்யாவின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.