'குட் பேட் அக்லி' படம் வெளியான புதிய தகவல் !


குட் பேட் அக்லி படம் வெளியான புதிய தகவல் !
x
தினத்தந்தி 6 Nov 2024 10:27 AM (Updated: 2 Jan 2025 1:41 AM)
t-max-icont-min-icon

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிவடைந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் ஸ்பெயினில் நடைபெற்றது. அங்கு ஒரு சில முக்கியமான சண்டைக்காட்சிகளும் பாடலும் படமாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து தற்போது பல்கேரியாவில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு வருகிற 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் பின்னர் படக்குழு இந்தியா திரும்ப இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story