திரிஷாவை விமர்சித்த நெட்டிசன்- ஆதரவுக் குரல் கொடுத்த பிரபல நடிகர்


Netizens criticize Trisha - Famous actor voices support
x
தினத்தந்தி 7 Jun 2025 11:15 PM IST (Updated: 8 Jun 2025 11:44 PM IST)
t-max-icont-min-icon

திரிஷாவுக்கு ஆதரவாக நடிகர் எஸ்.வி.சேகர் குரல் கொடுத்துள்ளார்.

சென்னை,

நடிகை திரிஷாவை சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் விமர்சித்தநிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் எஸ்.வி.சேகர் குரல் கொடுத்துள்ளார்.

திரிஷாவுக்கு சில கேள்விகள் என்ற தலைப்பில் பதிவிட்ட ஒருவர், கணவரை விட்டு வேறு ஒருவரை காதலிப்பது, கணவருடன் கோபித்துக் கொண்டு செல்வது, கள்ளக்காதலியாக நடிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

இதுபோன்ற கதாபாத்திரங்கள்தான் உங்களைத் தேடி வருகிறதா? அல்லது நீங்கள் அதை தேர்ந்தெடுக்கிறீர்களா? என்றும் கேள்வி எழுப்பினார். இந்த பதிவை டேக் செய்து, நடிகர் எஸ்.வி.சேகர் வெளியிட்டுள்ள பதிவில், திரிஷா எப்படி நடிக்க வேண்டும், யாரோடு நடிக்க வேண்டும் என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை. பிடித்திருந்தால் பாருங்கள்.. இல்லை பார்காதீங்கள் என்று கூறி இருக்கிறார்.

1 More update

Next Story