சமந்தா, தமன்னாவை தொடர்ந்து ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா..!


சமந்தா, தமன்னாவை தொடர்ந்து ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா..!
x

'தி ராஜா சாப்' படத்தில் பாடலுக்கு நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். தற்போது இவர் கைவசம் "டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டுடண்ட், டாக்ஸிக், ராக்காயி" உள்ளிட்ட படங்கள் வரிசையில் உள்ளன.

இதற்கிடையில், முன்னணி நடிகைகள் சிறப்பு பாடலுக்கு நடனமாடுவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். 'புஷ்பா 1' படத்தில் சமந்தாவின் சிறப்பு நடனம் பரவலாக பேசப்பட்டது. அதே போல் 'ஜெயிலர்' படத்தில் தமன்னா, சமீபத்தில் வெளிவந்த 'புஷ்பா '2 படத்தில் ஸ்ரீலீலா என இவர்களின் நடனம் வைரலானது.

அந்த நிலையில், தற்போது நயன்தாரா தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகரான பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்தில் நடைபெறும் என்கிறார்கள். நயன்தாரா இதற்கு முன்பு 'சிவாஜி, எதிர்நீச்சல்' ஆகிய படங்களில் மட்டுமே சிறப்பு பாடலுக்கு நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story