'நருடோ' சீரிஸ் அனிமேட்டர் ஷிகேகி அவாய் காலமானார்


நருடோ சீரிஸ் அனிமேட்டர் ஷிகேகி அவாய் காலமானார்
x

இவர் இயக்கியதில் குறிப்பாக 'ஒன் பீஸ், நருடோ' ஆகிய அனிம்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

உலகளவில் அனிமேஷன் துறையில் இயக்குனராகவும், அனிமேட்டராகவும் புகழ்பெற்றவராக வலம் வந்தவர் ஷிகேகி அவாய். இவர் ஷிகேனோரி அவாய் என்றும் அழைக்கப்பட்டார். 1980-களில் அனிமேஷன் துறையில் நுழைந்த அவாய் "ஒன் பீஸ், நருடோ, அட்டாக் ஆன் டைட்டன், டிடெக்டிவ் கோனன், புட் வார், ஒன் பன்ஜ் மேன் உள்ளிட்ட பல பிரபலமான அனிம்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கியதில் குறிப்பாக 'ஒன் பீஸ், நருடோ' ஆகிய அனிம்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் அனிமேஷன் துறையில் சுமார் 200க்கும் அதிகமாக அத்தியாயங்களை இயக்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அதிக அளவிலான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் இவர் இயக்கிய அனிமேஷன் படங்களின் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.

ஷிகேகி அவாய் (71) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இந்த செய்தி அனிம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்கள் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.


Next Story