3 கோடி பார்வைகளை கடந்த நானியின் "ஹிட் 3" டிரெய்லர்
நானியின் 'ஹிட் 3' படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் 3' படத்தில் நடித்து வருகிறார். கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.
இப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் பெரிய ஹிட் அடித்ததைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் தயாராகி வருகிறது. பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியாகி வைரலானது.
சமீபத்தில் 'ஹிட் 3' படத்தின் டிரெய்லர் வெளியானது.
இந்நிலையில், நானியின் 'ஹிட் 3' டிரெய்லர் 3 கோடி பார்வைகளை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story







