'நன்றி மாமே... '- 'குட் பேட் அக்லி' பட புகைப்படங்களை பகிர்ந்து திரிஷா நெகிழ்ச்சி


Nandri mammeyyyyy….Trisha shares photos from Good Bad Ugly
x
தினத்தந்தி 12 April 2025 2:34 PM IST (Updated: 12 April 2025 2:38 PM IST)
t-max-icont-min-icon

நேற்று முன்தினம் வெளியான 'குட் பேட் அக்லி' படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை,

அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'மௌனம் பேசியதே' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் திரிஷா. தொடர்ந்து 'சாமி', 'கில்லி', 'ஆறு' உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

'பொன்னியின் செல்வன்', 'லியோ' உள்ளிட்ட படங்களில் திரிஷாவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது. தற்போது அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'குட் பேட் அக்லி' படத்தில் திரிஷா நடித்திருக்கிறார். நேற்று முன்தினம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், குட் பேட் அக்லி படத்திற்கு வரவேற்பளிக்கும் ரசிகர்களுக்கு திரிஷா நன்றி தெரிவித்திருக்கிறார். அதன்படி, குட் பேட் அக்லி பட புகைப்படங்களை பகிர்ந்து 'நன்றி மாமே' என்று திரிஷா பதிவிட்டு உள்ளார்.

1 More update

Next Story