தனது 100-வது படம் குறித்து மனம் திறந்த நாகார்ஜுனா


Nagarjuna opens up about his 100th film
x

இந்தப் படம் குறித்த அறிவிப்பு நாகார்ஜுனாவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நட்சத்திரங்களின் பட்டியலில் தற்போது நடிகர் நாகார்ஜுனாவும் இணைய உள்ளார். தென்னிந்திய சினிமாவில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி போன்ற ஜாம்பவான்கள் மட்டுமே இந்த அரிதான சாதனையை கொண்டுள்ளனர்.

நாகார்ஜுனாவின் 100-வது படத்தை தமிழ் இயக்குனர் ரா.கார்த்தி இயக்க இருக்கிறார். இந்நிலையில், தனது 100-வது படம் குறித்து நாகார்ஜுனா மனம் திறந்து பேசி இருக்கிறார். அவர் கூறுகையில்,

"எனது 100-வது படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. சரியான நேரத்தில் விவரங்களை அறிவிப்போம்," என்று நாகார்ஜுனா தெரிவித்தார். இந்தப் படம் குறித்த அறிவிப்பு நாகார்ஜுனாவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிரது..

நாகார்ஜுனா கடந்த 1986-ல் "விக்ரம்" படத்தின் மூலம் அறிமுகமானார். ஆரம்பத்தில் விமர்சனங்களை சந்தித்தாலும், பின்னர் தனது முத்திரையைப் பதித்து தெலுங்கு சினிமாவின் சிறந்த நட்சத்திரமாக நிலைநிறுத்திக் கொண்டார்.

1 More update

Next Story