''என் மகன் இறந்து விட்டான்'' - நடிகை திரிஷாவின் சோகமான பதிவு


என் மகன் இறந்து விட்டான் - நடிகை திரிஷாவின் சோகமான பதிவு
x

கிறிஸ்துமஸ் தினமான இன்று தனது மகன் இறந்து விட்டதாக நடிகை திரிஷா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் திரிஷா. இவர் தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் 'சூர்யா 45' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், அஜித்குமாருடன் இணைந்து 'விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி' படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்கிறார்.

இதற்கிடையில் நடிகை திரிஷா, ஸோரோ என்ற நாயை 2012 ஆம் ஆண்டு முதல் செல்லமாக வளர்த்து வந்தார். அதனை நாய் என்று சொல்லாமல் ஸோரோவை தனது மகன் என்றே குறிப்பிடுவார். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் தினமான இன்று காலை திரிஷாவின் வளர்ப்பு நாயான ஸோரோ திடீரென உயிரிழந்துள்ளது.

இதனால் நடிகை திரிஷா தனது சமூக வலைதளங்களில் இந்த சோகமான செய்தி பகிர்ந்துள்ளார். அதாவது, "என் மகன் சோரோ இன்று கிறிஸ்துமஸ் காலை உயிரிழந்து விட்டான். என்னை நெருக்கமாக அறிந்தவர்களுக்கு இனி என் வாழ்க்கை ஒருதுளி அர்த்தமும் இல்லாத ஒன்று என்பது நன்கு தெரியும். "நானும் என் குடும்பத்தாரும் உடைந்துவிட்டோம். நாங்கள் அதிர்ச்சியில் இருக்கிறோம். இதனால் சிறிது காலம் பணியில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு, ரேடாரில் இருந்து விலகி இருப்பேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story