மியூசிக் அகாடமி 99-வது ஆண்டு விருதுகள் அறிவிப்பு

வயலின் கலைஞர் ஸ்ரீராம் குமாருக்கு சங்கீத கலாநிதி விருதை மியூசிக் அகாடமி அறிவித்துள்ளது.
சென்னை,
சென்னை மியூசிக் அகாடமியின் நிர்வாக குழு கூட்டம், அகாடமி தலைவர் என்.முரளி தலைமையில் நடைபெற்றது. அதில், 2025-ம் ஆண்டுக்கான 'சங்கீத கலாநிதி', 'நிருத்திய கலாநிதி' உள்ளிட்ட விருதுகளை பெறும் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதாவது, மியூசிக் அகாடமி 99-வது ஆண்டிற்காக விருது வென்றவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
சங்கீத கலாநிதி விருது : வயலின் கலைஞர் ஸ்ரீராம் குமார்
நிருத்ய கலாநிதி விருது : பரதநாட்டிய கலைஞர் ஊர்மிளா சத்தியநாராயணா
சங்கீத கலா ஆச்சார்யா விருது : ஷியாமளா வெங்கடேஸ்வரன், தஞ்சாவூர் ஆர் கோவிந்தராஜன்
டி.டி.கிருஷ்ணமாச்சாரி நினைவு விருது : கதகளி நிபுணர் மாடம்பி சுப்பிரமணிய நம்பூதிரி, ஜே டி ஜெயராஜ் கிருஷ்ணன், ஜெய்ஸ்ரீ ஜெயராஜ் கிருஷ்ணன்
இசையமைப்பாளர் விருது : பேராசிரியர் சி.ஏ.ஸ்ரீதரா
இந்த விருது வழங்கும் விழா வருகிற டிசம்பர் 15-ந் தேதி முதல் 2026-ம் ஜனவரி 1-ந் தேதி வரை நடைபெறும். மியூசிக் அகாடமியின் 99வது ஆண்டு மாநாடு மற்றும் நிகழ்ச்சிகளின் அமர்வுகளுக்கு சங்கீத கலாநிதி விருது பெறுபவர் தலைமை தாங்க உள்ளார்.






