பிரெஞ்சு, ஸ்பானிஷ் படங்களில் நடிக்க விரும்பும் மிருணாள் தாக்கூர்

பிரெஞ்சு, ஸ்பானிஷ் படங்களில் நடிக்க விரும்புவதாக மிருணாள் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாக்கூர். சீதா ராமம், ஹாய் நன்னா, பேமிலி ஸ்டார் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், பிரெஞ்சு, ஸ்பானிஷ் படங்களில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'சீதாராமம், ஹாய் நன்னா படங்களுக்குப் பிறகு எனக்கு அதிக வாய்ப்புகள் வருகின்றன. இந்தப் படங்கள் என் மீதான எதிர்பார்ப்பையும் எனது பொறுப்பையும் அதிகரித்திருக்கிறது. அதனால் ரசிகர்களை கவரும் வகையிலான படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.
இப்போது எனக்காகவும் கதைகள் எழுதப்படுவதை நினைத்து மகிழ்கிறேன். இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளுக்குள் அடங்கிவிடாமல் மலையாளம், பஞ்சாபி, பிரெஞ்சு, ஸ்பானிஷ் படங்கள் என்றால் கூட ஏற்பேன்' என்றார்.