நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்


நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்
x

நாளை (டிசம்பர் 20) திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் குறித்த ஒரு பார்வை.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் நாளை வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்து தகவலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

'விடுதலை பாகம் 2'

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'விடுதலை 2'. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், மஞ்சுவாரியர், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், சேத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். தணிக்கை குழு இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

'மார்கோ'

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் உன்னி முகுந்தன் நடித்துள்ள படம் 'மார்கோ'. இந்த படத்தை ஹனீப் அடேனி இயக்கியுள்ளார். படத்திற்கு சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய 'கே ஜி எப், சலார்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இதற்கு இசையமைத்துள்ளார். ஆக்சன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது.

'முபாசா: தி லயன் கிங்'

லயன் கிங் படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இப்படம் காட்டு விலங்களுக்குள் இருக்கும் பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி, போராட்டம், பந்தம் , காதல், தலைமை என அனைத்து குணாதிசயங்களை அழகாக எடுத்து காட்டி இருக்கும். அந்த வகையில் சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது முபாசா : தி லயன் கிங் படம். இந்த படத்தை பேரி ஜென்கின்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

'ரைபிள் கிளப்'

ஆஷிக் அபு இயக்கத்தில் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரைபிள் கிளப்'. இப்படத்தில் அனுராக் காஷ்யப் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், திலீஷ் போத்தன், தர்ஷனா ராஜேந்திரன், வாணி விஸ்வநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஓபிஎம் சினிமாஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

'யு.ஐ'

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குனருமான உபேந்திரா இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம், 'யு.ஐ'. சயின்ஸ் பிக்சன் ஆக்சன் படமான இதில் ரேஷ்மா நானய்யா, சன்னி லியோன், சாது கோகிலா, ஜிஷு சென்குப்தா, முரளி சர்மா என பலர் நடித்துள்ளனர். கன்னடத்தில் உருவான இந்தப் படம், தமிழ், தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இப்படம் ரூ.100 கோடி ரூபாய் பட்ஜட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.


Next Story