'காந்தாரா' படத்தில் இணையும் மோகன்லால்?


காந்தாரா படத்தில் இணையும் மோகன்லால்?
x
தினத்தந்தி 1 Oct 2024 3:09 PM IST (Updated: 10 Dec 2024 6:30 PM IST)
t-max-icont-min-icon

'காந்தாரா எ லெஜெண்ட் சாப்டர் 1' படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

சென்னை,

கன்னட நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் 'காந்தாரா'. இப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெய்வமாக வணங்கும் 'பஞ்சுருளி' என்ற காவல் தெய்வத்தை மையமாக வைத்து உருவான படம் காந்தாரா. இந்த படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர்.

ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. ரூ.16 கோடி செலவில் தயாராகி ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதில் ரிஷப் ஷெட்டி ஏற்று நடித்த பஞ்சுருளி தெய்வ கதாபாத்திரம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகமான 'காந்தாரா எ லெஜெண்ட் சாப்டர் 1' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வரும் நிலையில், இதில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகரான மோகன்லால் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பான் இந்தியா படமாக உருவாகும் 'காந்தாரா எ லெஜெண்ட் சாப்டர் 1' அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக கதைப்படி ரிஷப் செட்டியின் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தனது மனைவியுடன் ரிஷப் செட்டி மோகன்லாலை சென்று சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story