'புஷ்பா 2' டிரெய்லர் வெளியீட்டு விழா குறித்த நடிகர் சித்தார்த் கருத்துக்கு பாலிவுட் பாடகர் பதிலடி


புஷ்பா 2 டிரெய்லர்  வெளியீட்டு விழா குறித்த  நடிகர் சித்தார்த் கருத்துக்கு பாலிவுட் பாடகர் பதிலடி
x

‘புஷ்பா 2’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கூட்டம் கூடியதற்கு மார்கெட்டிங்தான் காரணம் என்று நடிகர் சித்தார்த் கூறியிருந்தார்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. இப்படம் 6 நாட்களில் ரூ.1002 கோடி வசூல் செய்துள்ளது. இப்படம் இந்திய சினிமா வரலாற்றில் ரிலீஸான 6 நாட்களிலேயே விரைவாக ரூ.1000 கோடி வசூல் செய்த முதல் படம் என்கிற சாதனை படைத்திருக்கிறது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பாட்னாவில் நடைபெற்றது. அதில் ஆயிரக்கனக்கான மக்கள் கலந்துகொண்டனர். இது குறித்து அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றில் நடைபெற்ற பேட்டியில், நடிகர் சித்தார்த்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சித்தார்த் "இந்தியாவில் கூட்டம் கூடுவது என்பது மிகப்பெரிய விஷயம் அல்ல" என்று கூறினார். மேலும், "கட்டுமான பணிகளுக்காக ஒரு ஜே.சி.பி கொண்டு வந்து நிறுத்தினால் கூட கூட்டம் கூடும். பாட்னாவில் அவ்வளவு பெரிய கூட்டம் கூடியதற்கு மார்கெட்டிங் தான் காரணம். ஒரு பெரிய மைதானம் ஏற்பாடு செய்தால் கூட்டம் கூடும் . இந்தியாவில் கூட்டம் கூடுவதற்கும் குவாலிட்டிக்கும் சம்பதந்தம் இல்லை. அப்படி பார்த்தால் எல்லா அரசியல் கட்சிக்கும் தான் கூட்டம் கூடுது எல்லாம் அரசியல் கட்சி ஏன் ஜெயிக்கல. எல்லோருக்கும் கூட்டம் கூடத்தானே செய்கிறது. ஆகவே, கரகோஷமும், கூட்டம் கூடுவதும் இயல்பு. அதனால் கூட்டத்தை வைத்து அந்த படம் வெற்றி பெறும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது" என்று கூறியுள்ளார். அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது.


இந்த நிலையில் சித்தார்த்தின் பேச்சுக்கு பாலிவுட் பாடகர் மிகா சிங் பதிலடி கொடுத்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் பகிர்ந்திருப்பதாவது, "வணக்கம் சித்தார்த் பாய். உங்கள் கருத்தில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இன்று முதல் மக்கள் உங்கள் பெயரைக் கொஞ்சம் கொஞ்சமாக அறியத் தொடங்கியுள்ளனர். சற்று யோசித்துப் பாருங்கள், இதுவரை நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றே எனக்குத் தெரியவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.


Next Story