வெளியானது 'பிரதர்' படத்தின் 'மெதக்குது காலு ரெண்டும்' பாடல்


தினத்தந்தி 23 Oct 2024 12:06 PM GMT (Updated: 23 Oct 2024 12:45 PM GMT)

ஜெயம் ரவி நடித்துள்ள 'பிரதர்' திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளது.

சென்னை,

நடிகர் ஜெயம் ரவி தற்போது இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கத்தில் 'பிரதர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், பூமிகா, விடிவி கணேஷ், சீதா, நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

அக்கா - தம்பி உறவை அடிப்படையாக கொண்டு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. 'பிரதர்' படத்துக்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படம் வருகிற 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் படக்குழுவினர் படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது இப்படத்தின் புது பாடலான 'மெதக்குது காலு ரெண்டும்' என்ற பாடல் வெளியாகி உள்ளது. இது குறித்த பதிவை தயாரிப்பு நிறுவனமான ஸ்கிரீன் சீன் மீடியா வெளியிட்டுள்ளது.


Next Story