மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை 21 வயதிலேயே தத்தெடுத்த ஸ்ரீலீலா


தினத்தந்தி 14 Aug 2024 4:04 PM GMT (Updated: 23 Aug 2024 8:21 AM GMT)

மகேஷ் பாபு, ரவி தேஜா போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் ஸ்ரீலீலா பணிபுரிந்துள்ளார்.

சென்னை,

21 வயதில் இரண்டு மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளைத் தத்தெடுக்க முடிவு செய்த தென்னிந்தியாவைச் சேர்ந்த இளம் நடிகை. இப்போது 23 வயதாகும் இந்த நடிகை மகேஷ் பாபு, ரவி தேஜா போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் பணிபுரிந்துள்ளார்.

அவர் நடிப்பிற்காக மட்டுமில்லாமல் நடனம், அழகான தோற்றம் மற்றும் பேஷனுக்காக நன்கு அறியப்பட்டவர். ஆம், நாம் ஸ்ரீலீலாவைப் பற்றித்தான் பேசுகிறோம்.

ஸ்ரீலீலாவின் அம்மா ஒரு மருத்துவர். இதனால், தனது தாயின் பாதையை பின்பற்றி மருத்துவராக ஆசைப்பட்ட ஸ்ரீலீலா எம்.பி.பி.எஸ் படிப்பை தேர்ந்தெடுத்தார். பின்னர், சினிமா துறையை தேர்ந்தெடுத்த ஸ்ரீலீலா, கடந்த 2019-ல் வெளிவந்த கிஸ் திரைப்படத்தில் நடித்து கன்னடத்தில் அறிமுகமானார். இப்படம் 100 நாட்களுக்கும் மேல் ஓடியது.

பின்னர், 2021-ல் பெல்லி சண்டாட் திரைபடத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், ஸ்ரீலீலாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

சமீபத்தில், மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்தார். இப்படம் அவரின் புகழை மேலும் உயர்த்தியது எனலாம். இவ்வாறு இளம் நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா தனது 21-வது வயதிலேயே இரண்டு மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை தத்தெடுத்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம், கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி-ல் குரு என்ற ஆண் குழந்தையையும், ஷோபிதா என்ற பெண் குழந்தையையும் தத்தெடுத்து மில்லியன் கணக்கான இதயங்களை வென்றார். இதனை, தனது கன்னட படமான 'பை டூ லவ்' படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு செய்தார். இந்த படத்தில் அவர் தாயாக நடித்திருந்தார்.


Next Story