விஷாலுடன் திருமணமா? - 15 வருட ரகசியத்தை உடைத்த `நாடோடிகள்' அபிநயா
![Marriage with Vishal? - Abhinaya from `Nadodigal breaks 15-year secret Marriage with Vishal? - Abhinaya from `Nadodigal breaks 15-year secret](https://media.dailythanthi.com/h-upload/2025/01/29/36368387-abi.webp)
நடிகர் விஷாலுடன் திருமணம் என்ற வதந்திகளுக்கு நடிகை அபிநயா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
திருவனந்தபுரம்,
தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அபிநயா. அந்த படத்தில் சசிக்குமாரின் தங்கையாகவும் விஜய் வசந்த்தின் ஜோடியாகவும் அவர் நடித்திருப்பார். நாடோடிகள் படத்தை தொடர்ந்து ஈசன், ஏழாம் அறிவு, வீரம், தனி ஒருவன், தாக்க தாக்க, ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களில் இவர் நடித்தார்.
இந்நிலையில், நடிகர் விஷாலுடன் திருமணம் என்ற வதந்திகளுக்கு நடிகை அபிநயா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவர் விஷாலுடன் பூஜை, மார்க் ஆண்டனி படங்களில் நடித்தார். இந்த சூழலில், அபிநயாவை விஷால் மணமுடிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் அபிநயா அதனை மறுத்துள்ளார்.
மேலும், 15 வருடங்களாக தன்னுடன் படித்த நண்பரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் அபிநயா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story