மலையாள சினிமாவுக்கு இந்த ஆண்டு ரூ.700 கோடி இழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்


Malayalam cinema has lost Rs 700 crore this year - shocking information revealed
x
தினத்தந்தி 29 Dec 2024 10:18 AM IST (Updated: 29 Dec 2024 10:19 AM IST)
t-max-icont-min-icon

இந்த ஆண்டு மலையாள சினிமாவில் ஐந்து ரீ-ரிலீஸ் உட்பட 204 படங்கள் வெளியாகின.

திருவனந்தபுரம்,

கேரள சினிமாத்துறை 2024-ம் ஆண்டில் மட்டும் ரூ.650 முதல் ரூ.700 கோடி வரை இழப்பைச் சந்தித்துள்ளதாக கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், 'இந்த ஆண்டு மலையாள சினிமாவில் ஐந்து ரீ-ரிலீஸ் உட்பட 204 படங்கள் வெளியாகின. இதற்கு சுமார் ரூ.1,000 கோடி செலவிட்டது. இதில் 26 திரைப்படங்கள் மட்டுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று எங்களுக்கு ரூ.350 கோடி மட்டுமே லாபம் கிடைத்தது, அதே நேரத்தில் ரூ.650 முதல் ரூ.700 கோடி வரை இழப்பு ஏற்பட்டது.

நாங்கள் நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று அடிக்கடி கோரிக்கை விடுத்த போதிலும் அவர்கள் அதை விரும்பவில்லை. இது தொடர்ந்தால், திரைப்படத் துறை பெரும் இழப்பைச் சந்திக்கும்' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story