பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' படத்தின் அப்டேட் கொடுத்த மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன் தெலுங்கில் நடிக்கும் முதல் படம் 'தி ராஜா சாப்'
சென்னை,
மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்' போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். அதன் பிறகு நடிகர் தனுஷ் நடித்த 'மாறன்' படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது, தெலுங்கில் பிரபாசுடன் 'தி ராஜா சாப்' படத்தில் நடித்து வருகிறார். இது மாளவிகா மோகனன் தெலுங்கில் நடிக்கும் முதல் படமாகும். இந்நிலையில், இப்படத்தின் அப்டேட்டை மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார். அது குறித்து அவர் கூறுகையில்,
'ராஜா சாப் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, அது நன்றாக வந்துகொண்டிருக்கிறது. பிரபாஸ் எனக்கு பிடித்த ஹீரோக்களில் ஒருவர். நான் தெலுங்கில் அறிமுகமாகும் படத்திலேயே அவருடன் நடிப்பது உற்சாகமாக உள்ளது. எல்லோரும் அதை திரையில் பார்ப்பதை காண ஆவலாக உள்ளேன்' என்றார்.
'தி ராஜா சாப்' படத்தை தொடர்ந்து, கார்த்தியுடன் சர்தார் 2 படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இதில், எஸ் ஜே சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.