'புஷ்பா 2' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு


புஷ்பா 2 படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
x

சுகுமார் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான 'புஷ்பா 2' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கதில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கடந்த 5-ந் தேதி இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் வெளியானது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் சாம் சி எஸ் இப்படத்திற்கு பின்னணி இசை அமைத்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. இப்படத்தில் 'டான்சிங் குயின்' நடிகை ஸ்ரீலீலா 'கிஸ்சிக்' என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலக அளவில் ரூ.1850 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் விரைவில் ரூ.2,000 கோடி வசூலை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.


Next Story