ஆஸ்கர் விருதுக்கான போட்டி - 'லபாதா லேடீஸ்' திரைப்படம் வெளியேற்றம்
97-வது ஆஸ்கர் விருதுக்கான இறுதி போட்டியில் இருந்து 'லாபதா லேடீஸ்' திரைப்படம் வெளியேற்றப்பட்டு உள்ளது.
சினிமா உலகில் தலைசிறந்த விருது என்பது ஆஸ்கர் விருது ஆகும். உலக அளவில் திரையுலகின் படைப்புகளை அங்கீகரித்து கவுரவப்படுத்தும் உயரிய ஆஸ்கா் விருது ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 97-வது அடுத்த ஆண்டு நடைபெறும் 97-வது ஆஸ்கா் விருதுக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் இந்தியாவின் 'லாபதா லேடீஸ்' திரைப்படம் தோ்வு செய்யப்பட்டிருந்தது.
மொத்தம் 85 படங்கள் ஆஸ்கார் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்டன. அதில் இறுதி பட்டியலுக்காக 15 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அந்த இறுதி பட்டியலில் துரதிர்ஷ்டவசமாக கிரண் ராவ் இயக்கிய ' லாபடா லேடீஸ் ', சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படப் பிரிவின் அதிகாரபூர்வ நுழைவுப் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டது.
இருப்பினும், 'சந்தோஷ்' என்ற மற்றொரு இந்தி மொழி திரைப்படம் 'சிறந்த சர்வதேச திரைப்படம்' பிரிவில் இடம் பெற்றது. சந்தியா சூரி இயக்கிய இந்த திரைப்படம் கடந்த மே 2024 இல் 77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது மற்றும் விமர்சகர்களால் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.