'குபேரா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளி்யீடு


தினத்தந்தி 15 Nov 2024 6:38 PM IST (Updated: 2 Dec 2024 3:51 PM IST)
t-max-icont-min-icon

தனுஷ், நாகார்ஜுனா நடித்துள்ள 'குபேரா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

'ராயன்' படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார். 'குபேரா' படம் தனுஷின் 51-வது படமாக உருவாகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்தப் படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதைத்தொடர்ந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கான 80 சதவீதம் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கியுள்ளது.

இதற்கிடையில், படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோவை தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.


Next Story